செய்திகள்

நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயண பலன்களை அளவிட முடியாது: பிரதமர் அலுவலகம் தகவல்

Published On 2017-10-29 21:12 GMT   |   Update On 2017-10-29 21:12 GMT
பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் கிடைத்த பலன்களை அளவிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள், அதற்கான செலவினங்கள், வெளிநாடுகளில் அவர் செலவிட்ட நேரம், அவற்றின் மூலம் கிடைத்த பலன்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கீர்த்திவாஸ் மண்டல் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடியின் பயண விவரங்கள் மற்றும் செலவினம் குறித்த தகவல்கள் அனைத்தும் தனது இணையதளத்தில் இருப்பதாக கூறியது. ஆனால் வெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட நேரம், பயணங்களுக்கு செலவளித்த தொகைக்கான நிதி ஆதாரம் போன்றவை குறித்த தகவல்கள் இணையதளத்தில் இல்லை எனக்கூறி, மத்திய தகவல் ஆணையத்தில் கீர்த்திவாஸ் மேல்முறையீடு செய்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் கிடைத்த பலன்களை அளவிட முடியாது என்றும், அவை தங்கள் ஆவணத்தில் இல்லை என்றும் தெரிவித்து உள்ளது. மேலும் வெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட மணித்துளிகள் பற்றிய விவரமும் தங்கள் ஆவணத்தில் இல்லை எனக்கூறியுள்ள பிரதமர் அலுவலகம், பிரதமரின் பயண செலவினத்துக்கான தொகை, ‘இந்திய ஒருங்கிணைந்த நிதியில்’ இருந்து செலவிடப்படுகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளது. 
Tags:    

Similar News