செய்திகள்

ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 3 பேரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரணை

Published On 2017-09-23 16:56 IST   |   Update On 2017-09-23 16:56:00 IST
அரியானா மாநிலம் ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின் அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதுடெல்லி:

அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரில் ரியான் இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்துவந்த 7 வயது மாணவன் கடந்த 8-ம் தேதி பள்ளியின் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டான்.

இந்த வழக்கில் ரியான் பள்ளி பேருந்தின் நடத்துனர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த சிறுவனை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி, கழுத்தை அறுத்துக் கொன்ற தகவல் அம்பலமானது. மேலும், பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் தாமஸ் மற்றும் ஜெயஸ் தாமஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாணவன் கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு கூறியதையடுத்து நேற்று வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News