செய்திகள்

கின்னஸ் சாதனை படைக்கும் 101 அடி துர்கை அம்மன் மூங்கில் சிலை

Published On 2017-09-23 11:21 GMT   |   Update On 2017-09-23 11:21 GMT
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நவராத்திரி பூஜையை ஒட்டி செய்யப்பட்ட 101 அடி துர்கை அம்மன் சிலை உலகிலேயே மிகப்பெரிய மூங்கில் சிலை என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.
திஸ்பூர்:

அசாம் மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடக்கும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அம்மாநிலத்தின் கவுகாத்தி நகரில் துர்கா பூஜைக்காக 101 அடியில் துர்கை அம்மன் சிலை மூங்கிலால் செய்யப்பட்டுள்ளது. அதனை புகழ்பெற்ற கலை இயக்குனர் நுரூதின் அக்மத் தலைமையிலான 44 கலைஞர்கள் கொண்ட குழு வடிவமைத்தது. ஆரம்பத்தில் 110 அடி உயரத்தில் செய்ய திட்டமிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன.




ஆனால் இடையில் ஏற்பட்ட கடுமையான புயலால் சிலைக்கு சேதம் ஏற்பட்டது. பாதி வேலைப்பாடுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை ஆரம்பத்தில் இருந்து வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிலை உலகிலேயே மிக உயரமான மூங்கில் சிலை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

தற்சமயம் இந்த 101 அடி சிலை பூஜைக்காக நிறுவப்பட்டுள்ளது. வருகின்ற 27-ம் தேதி நான்கு நாள் பூஜை தொடங்கும் என கூறியுள்ளனர்.
Tags:    

Similar News