செய்திகள்

சர்க்கரை மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் அதிகரிப்பு

Published On 2017-07-11 04:54 IST   |   Update On 2017-07-11 04:54:00 IST
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரை மீதான வரியை 10 சதவீதம் உயர்த்த அண்மையில் உணவுத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
புதுடெல்லி:

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை வெகுவாக குறைந்து கரும்பு விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளும் பாதிக்கப்படும் நிலைமை உருவானது.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரை மீதான வரியை 10 சதவீதம் உயர்த்த அண்மையில் உணவுத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதை ஏற்றுக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் 40 சதவீத வரியை 50 சதவீதமாக அதிகரித்து மத்திய வருவாய்த்துறை நேற்று உத்தரவு பிறப்பித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்த உத்தரவு எந்த நாளில் முடியும் என்பது பற்றி கூறப்படவில்லை.

உள்நாட்டில் சர்க்கரை விலையை சீராக பராமரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் இருந்து தரமற்ற சர்க்கரை இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையிலும் இந்த வரி உயர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News