செய்திகள்

ஆந்திரா: குண்டூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Published On 2017-05-27 11:53 GMT   |   Update On 2017-05-27 11:53 GMT
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குண்டூர்:

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பீரங்கிபுரம் அருகே உள்ள கொல்லபாலம் என்ற இடத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் சாலை போடுவதற்கான ஜல்லி கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென பாறைகள் சரிந்து அவர்கள் மீது விழுந்தன.

இதில் பாறை இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள், குவாரிக்குச் சென்று பாறைகள் சரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், முறையாக லைசென்ஸ் பெற்று குவாரி நடத்தப்படுகிறதா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

விபத்து நடந்த பகுதியில் 8 தொழிலாளர்கள் வேலை பார்த்துள்ளனர். வெடி வைப்பதற்காக பாறைகளில் துளையிடப்பட்டபோது பாறைகள் சரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News