செய்திகள்

அசாமில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது: விரைவில் புதிய சட்டம்

Published On 2017-04-10 10:35 GMT   |   Update On 2017-04-10 10:35 GMT
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையில் சேருவதை தடை செய்யும் புதிய சட்டத்தை கொண்டு வர அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
கவுகாத்தி:

உலகளவில் மக்கள் தொகையில் 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அனைவருக்கும் தேவையான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை பெறுவது மிகுந்த சிரமமாக உள்ளது.

இந்த நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்திட அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.



இதுதொடர்பான புதிய மக்கள் தொகை கொள்கை வரைவை கல்வித்துறை மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா இன்று வெளியிட்டார். அப்போது, அவர் கூறுகையில், “மக்கள் தொகை கொள்கை வரைவின்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கான தகுதி கிடையாது என பரிந்துரைத்துள்ளோம். அனைத்து பெண்களுக்கும் கல்லூரி வரை இலவச கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்த கொள்கையின் நோக்கம்.

கல்விக் கட்டணம், போக்குவரத்து, புத்தகங்கள் மற்றும் விடுதி உணவுக்கட்டணம் ஆகியவற்றை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அரசு வேலை மற்றும் தேர்தல்களில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது நடைபெற குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த கொள்கை இறுதிவடிவம் பெற்றால் மகிழ்ச்சி” என்றார்.

Similar News