செய்திகள்

ஆந்திராவில் தேசிய பெண்கள் பாராளுமன்றம் தொடங்கியது: தலாய் லாமா பங்கேற்பு

Published On 2017-02-10 10:23 GMT   |   Update On 2017-02-10 10:23 GMT
ஆந்திராவில் மூன்று நாட்கள் நடைபெறும் தேசிய பெண்கள் பாராளுமன்றம் தொடங்கியது. இதில் புத்த மதகுரு தலாய் லாமா பங்கேற்றார்.
நகரி:

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே இப்ராகிம் பட்டினத்தில் பவித்ர சங்கமம் என்ற பகுதியில் தேசிய மகளிர் பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்கியது.

துவக்க விழாவில் புத்த மதகுரு தலாய் லாமா, மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, அசோக் கஜபதி ராஜு, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுவை கவர்னர் கிரண்பேடி, வங்காளதேச சபாநாயகர் ஷிரின் சவுத்ரி, காந்தியவாதி ஏலா பட், நடிகை மனிஷா கொய்ராலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

3 நாட்கள் நடைபெறும் இந்த மகளிர் பாராளுமன்ற கூட்டத்தில் சமூகம், கல்வி, விளையாட்டு, அரசியல், தொழில், பத்திரிகை, சினிமா, கலை, கலாச்சாரம் உள்ளிட்ட பிரிவுகளில் நம்நாட்டைச் சேர்ந்த பெண்களும், வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களும் பங்கேற்று பேசுகிறார்கள். கருத்து சுதந்திரம் பற்றியும் இந்த கூட்டத்தில் பேசி தீர்வு காணப்படுகிறது.

மேலும் 12 ஆயிரம் பிரதிநிதிகள், 8 ஆயிரம் மாணவ - மாணவிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

Similar News