செய்திகள்

சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்: சுப்பிரமணியசாமி

Published On 2017-02-10 14:44 IST   |   Update On 2017-02-10 14:44:00 IST
பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் தராததால் சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறினார்.
புதுடெல்லி:

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நேற்று கவர்னரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார். தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் கவர்னரிடம் அவர் கொடுத்துள்ளார்.

ஆனால் சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் தாமதிப்பது ஏன்?

சசிகலா தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கொடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் தரவில்லை. எனவே ஆட்சி அமைக்க சசிகலாவுக்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்.

இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.

Similar News