செய்திகள்

கான்பூர், ஆந்திரா ரெயில் விபத்து: விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமை முடிவு

Published On 2017-01-26 17:10 GMT   |   Update On 2017-01-26 17:10 GMT
கான்பூர் மற்றும் ஆந்திராவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கள் குறித்து விசாரணை செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

சத்தீஷ்கர் மாநிலம் ஜக்தால்பூர் நகரில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேசுவரத்துக்கு சென்று கொண்டிருந்த ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 20–ந்தேதி இரவு ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொனேரு என்ற இடத்துக்கு அருகே திடீரென தடம் புரண்டதில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.

இதே போல் கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதம் 20–ந்தேதி இந்தூர்–பாட்னா ரெயில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர்.

இந்த 2 விபத்துகளுக்கும் காரணம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் நாசவேலையாக இருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

இந்த நிலையில் விபத்துகள் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச ரெயில் விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு உள்ள பீகாரை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு அதிகாரிகள் பீகாருக்கு விரைந்து உள்ளனர்.

Similar News