செய்திகள்
செம்மர கடத்தலில் ஈடுபட்ட சீனாவை சேர்ந்தவர் உள்பட 13 பேர் கைது
செம்மர கடத்தலில் ஈடுபட்ட சீனாவை சேர்ந்தவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
ரேணிகுண்டா அருகே வனப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் நெல்லூர் மாவட்டம் தீர்த்தப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடராவ் (வயது 32), வெங்கடகிரி அசோக்குமார் (25), பெத்தபோடுசேனு பாண்டிமகேந்திரா (30), சித்தூர் மாவட்டம் மேலுமாய் கோனேரு நவீண்குமார் (30), நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி மண்டலம் அவரபாளையம் அவரராஜன் (55), லாலாபேட்டை காலப்பாடி துர்க்கா (23), பாரிமுரளி (28), கடப்பா மாவட்டம் சுண்டுப்பள்ளி மண்டலம் பெரிய பிடிகி கிராமம் பாக்ய மகாதேவநாயுடு (26), பெங்களூரு தேவேந்திரா (26), சாங் ஜியாலின் (32) சீனா நாட்டை சேர்ந்தவர் என தெரிய வந்தது. மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 24 செம்மரக்கட்டைகள், 3 கார்கள், 1 மோட்டார் சைக்கிள், 13 செல்போன்கள், 2 தங்கச் சங்கிலி, 2 தங்க மோதிரம் உள்பட 64 கிராம் தங்கநகைகள், ரூ.34 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது ரேணிகுண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.