செய்திகள்

உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தல் பாதுகாப்புக்கு 85 ஆயிரம் துணை ராணுவம்

Published On 2016-12-30 07:25 GMT   |   Update On 2016-12-30 07:25 GMT
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 85 ஆயிரம் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. 7 கட்டங்களாக ஒரு மாதம் வரை இந்த தேர்தல் நடைபெறலாம்.

5 மாநில தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் கமி‌ஷன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த 5 மாநிலத்துக்கு 1 லட்சம் துணை ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தை தேர்தல் கமி‌ஷன் கேட்டுக் கொண்டது. ஆனால் உள்துறை அமைச்சகமோ 85 ஆயிரம் துணை ராணுவத்தினருக்கு மேல் அனுப்ப இயலாது என்று தெரிவித்து உள்ளது. இதனால் இந்த 5 மாநில தேர்தல் பாதுகாப்பு பணியில் 85 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள். இதில் உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவு அனுப்பபடுகிறார்கள்.

மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் தான் (சி.ஆர்.பி.எப்) தேர்தலில் பெரும்பாலான பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் துணை ராணுவத்தில் 30 சதவீதம் உள்ளனர்.

Similar News