செய்திகள்

ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இன்று கேரளா வருகை

Published On 2016-12-29 10:55 IST   |   Update On 2016-12-29 10:55:00 IST
கேரள பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் திருவனந்தபுரம் வருகிறார்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் நேற்று இந்திய வரலாறு தொடர்பான மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு நாளை வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் திருவனந்தபுரம் வருகிறார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரை கேரள கவர்னர் சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் வரவேற்கிறார்கள்.

அங்கிருந்து கார் மூலம் கேரள பல்கலைக்கழகத்திற்கு செல்லும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

அதன்பிறகு மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ஜனாதிபதி வருகையொட்டி திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Similar News