செய்திகள்

தவணை முறையில் 30,000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி கைது

Published On 2016-12-28 14:34 GMT   |   Update On 2016-12-28 14:34 GMT
விசாகப்பட்டினத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாகப்பட்டினம்:

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பின் வருமான வரித்துறை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரி சீனிவாச ராவ் என்பவரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். தன்னிடமுள்ள சொத்துக்களை விற்கவந்த பில்டிங் காண்டிராக்டர் ஒருவரிடம் சீனிவாச ராவ் 1,50,௦௦௦ லஞ்சம் கேட்டுள்ளார்.

அவர் தன்னிடம் மொத்தமாக அவ்வளவு பணம் இல்லையென்று கூறியதும் தவணை முறையில் வாங்கிக்கொள்வதாக சீனிவாச ராவ் கூறியிருக்கிறார். முதற்கட்டமாக அந்த பில்டிங் கான்டிராக்டர் 30,000 ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்கிறார். பில்டிங் காண்டிராக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ சீனிவாச ராவைக் கைது செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News