செய்திகள்

முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு சிறப்பு சலுகை: உத்தரகாண்ட் அறிவிப்பு

Published On 2016-12-19 06:14 GMT   |   Update On 2016-12-19 06:14 GMT
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனை செய்ய 1½ மணி நேரம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹரீஸ் ராவத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஹரீஸ் ராவத் அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் முஸ்லிம்கள் வாக்குகளை கவர்வதற்காக உத்தரகாண்ட் அரசு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனை செய்ய 1½ மணி நேரம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை முஸ்லிம் ஊழியர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

டேராடூன் நகரில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்த திட்டத்தை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் உயர் கல்வி முடித்துள்ள டாக்டர்கள் அரசு பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் ரூ.2½ கோடி வரை அபராதம் விதிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.

Similar News