செய்திகள்

செல்லாத நோட்டு அறிவிப்பால், அரசுக்கு பணம் குவிகிறது நதிகள் இணைப்பை நிறைவேற்ற உதவும்: வெங்கையா நாயுடு

Published On 2016-11-26 23:29 GMT   |   Update On 2016-11-26 23:29 GMT
செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, மத்திய அரசுக்கு பணம் குவிந்து வருகிறது. அதைக் கொண்டு, கங்கையில் இருந்து காவிரி வரையுள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை முடிக்க முடியும் என வெங்கையா நாயுடு கூறினார்.
விஜயவாடா:

ஆந்திர மாநிலம் தடிபள்ளிகுடம் என்ற இடத்தில் பா.ஜனதா சார்பில் நேற்று விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அதில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ‘ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக பிரதமர் மோடி தர்ம யுத்தம் தொடுத்துள்ளார். இதில் அவருக்கு ஆதரவாக மக்கள் நிற்க வேண்டும். இது, நீண்ட கால நோய்க்கு அளிக்கப்படும் கசப்பு மருந்து. உங்கள் பணம் நியாயமானதாக இருந்தால், அது செல்லாததாக ஆகிவிடாது. ஊழலில் மூழ்கி கிடந்த காங்கிரஸ் கட்சி, இப்போது போதனை செய்கிறது. அக்கட்சியை விரைவில் அம்பலப்படுத்துவோம்.

செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, மத்திய அரசுக்கு பணம் குவிந்து வருகிறது. அதைக் கொண்டு, கங்கையில் இருந்து காவிரி வரையுள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை முடிக்க முடியும். பயிர் காப்பீட்டு திட்டத்துக்கும், நலத்திட்டங்களுக்கும் பணம் கிடைக்கும்’ என்றார். 

Similar News