செய்திகள்

நக்சலைட்களை வேட்டையாட களமிறங்கிய பெண் கமாண்டோக்கள்

Published On 2016-11-15 13:24 IST   |   Update On 2016-11-15 13:24:00 IST
நாட்டிலேயே முதன்முறையாக நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களை வேட்டையாடும் தனிப்படையில் பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சி:

ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை வேட்டையாட நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

இந்த படைப்பிரிவில் சேர்வதற்காக பயிற்சி சிறப்பு கமாண்டோ பயிற்சி பெற்ற 135 பெண்கள் நாட்டிலேயே முதன்முறையாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள நக்சல் ஒழிப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பெண் நக்சலைட்களை எதிர்த்து போராடுவதற்காக களமிறக்கப்பட்டுள்ள இந்த பெண் கமாண்டோக்கள் அனைவரும் ராஞ்சி நகரின் அருகே கூன்ட்டி பகுதியில் நக்சல்களின் நடமாட்டம் அதிகமுள்ள காடுகளுக்குள் பணியாற்றி வருகின்றனர் என மாநில மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவின் (துணை ராணுவம்) டி.ஐ.ஜி. கிரி பிரசாத் தெரிவித்துள்ளார்.

Similar News