செய்திகள்

பொது இடங்களில் புர்க்கா அணிய தடை கோரிய வழக்கு தள்ளுபடி

Published On 2016-11-15 12:54 IST   |   Update On 2016-11-15 12:54:00 IST
பாதுகாப்பு காரணங்களை கருதி பொது இடங்களில் புர்க்கா உள்ளிட்ட முகத்திரை அணிய தடை விதிக்கக் கோரிய வழக்கை டெல்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி:

புர்க்கா உள்ளிட்ட முகத்திரையை அணிந்தபடி செல்பவர்களில் தீவிரவாதிகளும் ஊடுருவலாம் என்பதால் நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருதி பொது இடங்களில் புர்க்கா உள்ளிட்ட முகத்திரை அணிய தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்துள்ளது.

Similar News