செய்திகள்

மராட்டியத்தில் வறுமை-கடன் தொல்லையால் 838 விவசாயிகள் தற்கொலை

Published On 2016-11-01 13:05 IST   |   Update On 2016-11-01 13:05:00 IST
மராட்டியத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை வறுமை மற்றும் கடன் தொல்லையால் 838 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
அவுரங்காபாத்:

மராட்டியத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதனால் மராத்வாடா, பீடு உள்பட 8 மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவியது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வங்கயில் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்தனர். குடும்பத்தில் வறுமையால் மிகவும் கஷ்டத்துக்கு ஆளானார்கள்.

இதன் காரணமாக 8 மாவட்டங்களில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மராத்வாடா மாவட்டத்தில் தான் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 10 மாதத்தில் மொத்தம் 838 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதிலும் ஜூன் தொடங்கி அக்டோபர் மாத தொடக்கம் வரையிலான 4 மாத காலத்தில் மட்டும் 342 பேர் தற்கொலை செய்தனர்.

இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகம் ஆகும். முந்தைய ஆண்டில் 778 தற்கொலைகள் நடந்தன.

மராத்வாடாவுக்கு அடுத்த படியாக பீடுமாவட்டத்தில் 4 மாதத்தில் 93 பேர், நான்டெட், உஸ்மனாபாத் மாவட்டங்களில் தலா 58 பேரும், தற்கொலை செய்தனர்.

Similar News