செய்திகள்

நாய் பூந்தொட்டியில் சிறுநீர் கழித்ததால் தாய், மகனுக்கு சரமாரி அடி- உதை

Published On 2016-09-01 22:47 IST   |   Update On 2016-09-02 07:12:00 IST
டெல்லியில் வளர்ப்பு நாய் பூந்தொட்டியில் சிறுநீர் கழித்ததால் அந்த நாயின் உரிமையாளருக்கு சரமாரி அடி உதை விழுந்துள்ளது.
கிழக்கு டெல்லி கல்யான்புரி பகுதியில் வசித்து வந்தவர் ரமணி சவுத்ரி. இவரது மகன் தேவேஷ் தன் வீட்டில் உள்ள வளர்ப்பு நாயை கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) இரவு 9 மணிக்கு வெளியே வாக்கிங் அழைத்துச் சென்றார்.

அப்போது ரமணி வீட்டின் அருகில் உள்ள ப்ரிஜ் லால் வீட்டின் அருகே நாய் சென்றபோது ப்ரிஜ் லால் தன் வீட்டுமுன் வைத்திருந்த பூந்தொட்டி மீது நாய் சிறுநீர் கழித்தது. இதனால் ப்ரிஜ் லால் மகன் மணிஷ், தேவேஷ் உடன் தகராறு செய்தார்.

இந்த தகராறு பின்னர் இரு வீட்டிற்கிடையேயான சண்டையாக மாறியது.  மணிஷ், அவரது சசோதரர் அனுஜ், அவனது தந்தை ஆகியோர் தேவேஷை தாக்கினார்கள். அத்துடன் ரமணியையும் அடித்து உதைத்தனர். இதில் ரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாய் சிறுநீர் கழித்த விவகாரத்திற்கான இரு குடும்பத்திற்கிடையே சண்டை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மணிஷை கைது செய்துள்ளனர். தப்பியோடிய அவரது சகோதரர் மற்றும் தந்தை ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Similar News