செய்திகள்

உத்தர பிரதேசத்தில் 2 பிரச்சார யாத்திரைகள் நடத்த காங்கிரஸ் திட்டம்: ஆகஸ்ட் 21-ல் ஆரம்பம்

Published On 2016-08-18 10:49 IST   |   Update On 2016-08-18 10:49:00 IST
உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வரும் 21-ம் தேதி முதல் 45 நாட்கள் தேர்தல் பிரச்சார யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வரும் 21-ம் தேதி முதல் 45 நாட்கள் தேர்தல் பிரச்சார யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2017) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் கைப் பற்ற வேண்டும் என்று ஆளும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய 4 கட்சிக ளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் உத்தரபிரதேசம் கை கொடுத்தால்தான் சாதகமாக இருக்கும் என்பதால் அங்கு அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என் பதில் காங்கிரஸ் கட்சி மிகவும் தீவிரமாக உள் ளது. 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை இழந்த காங்கிரஸ், மீண்டும் அங்கு தலையெடுக்க முடியாமல் தவித்தப்படி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர் தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 28 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. அதன் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

உத்தரபிரதேசத்தில் சரிந்து விட்ட மக்கள் ஆதரவை மீண்டும் பெறும் நோக்கத்தில் கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரமாண்ட பேரணி நடத் தினார். அதில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இது காங்கிரசாரிடம் புத்துணர்ச் சியை ஏற்படுத்தியது.

ஆனால் துரதிர்ஷ்டவச மாக சோனியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தொடர்ந்து அவரால் உத்தரபிரதேசத்தில் பிரசாரத் தில் ஈடுபட இயலவில்லை. இதைத் தொடர்ந்து முதல்- மந்திரி வேட்பாளர் ஷீலா தீட்சித், குலாம்நபி ஆசாத் இருவரும் பிரசார பொறுப்பை ஏற்றுள்ளனர்.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வருகிற 21-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 9-ந்தேதி வரை 45 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த உள்ளனர். மொத்தம் 16 தலைவர்கள் இந்த யாத்திரையில் ஈடுபட உள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் தலா 33 மாவட்டங்களில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளனர். முதல் குழுவிற்கு முதல்வர் வேட்பாளர் ஷீலா தீட்சித்தும், இரண்டாவது குழுவிற்கு மாநில தலைவர் ராஜ் பப்பரும் தலைமை தாங்கி யாத்திரையை வழிநடத்த உள்ளனர்.

Similar News