செய்திகள்

மோடி பி.ஏ., பட்டம் பெற்றதற்கு ஆதாரம் இல்லை: ஆம் ஆத்மி மூத்த தலைவர் பேச்சு

Published On 2016-05-07 07:09 IST   |   Update On 2016-05-07 07:09:00 IST
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசிஷ் கேத்தான், மோடி பி.ஏ. பட்டம் பெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று கூறினார்.
புதுடெல்லி :

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பிரச்சினை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசிஷ் கேத்தான், பிரதமர் மோடி பி.ஏ. பட்டம் பெற்றதற்கு ஆதாரம் இல்லை என்று கூறினார்.

இதுபற்றி அவர் நேற்று கூறும்போது, “டெல்லி பல்கலைக்கழகத்தின் 1975-1980 கால கட்டத்திற்குரிய ஆவணங்களை எங்கள் மட்டத்தில் ஆராய்ந்து பார்த்து விட்டோம். அதில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்ற பெயரில் யாரும் பட்டம் பெறவே இல்லை. அந்த காலகட்டத்தில் ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வாரை சேர்ந்த நரேந்திர குமார் மகாவீர் பிரசாத் மோடி என்பவர் பட்டம் பெற்றிருக்கிறார்” என்றார்.

நாட்டின் பிரதமரின் கல்வித்தகுதி குறித்து பிரச்சினை எழுந்திருப்பது இதுவே முதல் முறை எனவும் அவர் குறிப்பிட்டார். 

Similar News