செய்திகள்

வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம்

Published On 2016-04-25 15:46 IST   |   Update On 2016-04-25 15:46:00 IST
மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வீதிகளில் பிச்சை எடுபதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல் என்று கூறியுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது.

மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Similar News