இந்தியா

தெலுங்கானாவில் அடித்தது யோகம்: ரூ.500 பரிசு சீட்டில் ரூ.16 லட்சம் வீடு வென்ற 10 மாத குழந்தை

Published On 2025-11-03 09:49 IST   |   Update On 2025-11-03 09:49:00 IST
  • ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.
  • ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார்.

இவரது வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் தனது வீடு, நிலத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நெடுஞ்சாலை ஓரத்தில் பேனர் வைத்தார். ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.

சங்கர் பள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். சங்கர் இவரது பெயரிலும் இவரது மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் தனது 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் 4 சீட்டு வாங்கினார்.

நேற்று அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News