- மற்றவர்களைவிட நாம் தாழ்ந்து தான் போய்விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மனம் உடைந்து போய்விடும்.
- தனிமை, யாரைப் பார்த்தாலும் தேவையில்லாத மன எரிச்சல் இவற்றின் வித்தாகிவிடும்.
" உன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, உன் அகங்காரத்தின் விளையாட்டுதான்.
ஒப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.
அது எந்த விதத்திலும் துன்பத்தை தந்து விடும்.
இரண்டு வகையிலும் துயரம் உன்னை ஆட்கொண்டு விடும்.
ஒன்று, மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றிவிட்டால், அது ஒருவித பெருமிதத்துடன், தேவையில்லாத ஆணவத்தையும் உனக்குள் ஏற்படுத்திவிடும்.
அது, மன இறுக்கம், தனிமை, துயரம் இவற்றின் விதையாகி விடும்.
இரண்டு, மற்றவர்களைவிட நாம் தாழ்ந்து தான் போய்விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மனம் உடைந்து போய்விடும். அது, தனிமை, யாரைப் பார்த்தாலும் தேவையில்லாத மன எரிச்சல் இவற்றின் வித்தாகிவிடும்.
இரு விதத்திலும், துயரமும், துன்பமும்தான்.
இந்த இரண்டு பாறைகளுக்கு இடையே சிக்கி,நொறுங்கிப் போய்விடும் வாழ்க்கை.
இவைகள், வாழ்வின் தொடர் எண்ணங்களாகவும் போய்விடும்.
ஆகையால், மற்றவர்களுடன், உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுவது நல்லது.