கதம்பம்

வேதாத்ரியும் பெரியாரும்...

Published On 2023-03-28 11:00 GMT   |   Update On 2023-03-28 11:00 GMT
  • கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவதுபோல மக்கள் மனத்தைப் பண்படுத்திச் சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.
  • சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை என்றார் மகரிஷி அவர்கள்.

ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் வேதாத்ரி மகரிஷி அவர்கள் "கடவுளைக் காணலாம்" என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்கள்.

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார். "ஐயா, இது பெரியார் பிறந்தமண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே" என்றார்.

"அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைவனை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார். அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.

நானும் அதைத்தான் சொல்கிறேன். இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவன் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளான். அவனுள் இறைவனே அறிவாக உள்ளான். இதை சிந்தித்து அறியச் சொல்கிறேன்.

கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவதுபோல மக்கள் மனத்தைப் பண்படுத்திச் சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார். அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை" என்றார் மகரிஷி அவர்கள்.

-சோம நடராஜன்

Tags:    

Similar News