கதம்பம்

5வயது வரை தாய்ப்பால்...

Published On 2023-03-14 10:47 GMT   |   Update On 2023-03-14 10:47 GMT
  • கணக்குபோட்டால் ஒரு பழங்குடி பெண் ஆயுளில் ஐம்பதே முறைதான் மாதவிலக்கை சந்திக்கிறார்.
  • வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெண்கள் ஆயுளில் 400 முறை மாதவிலக்கை சந்திக்கிறார்கள்.

மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆப்பிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டு "நிசா: ஒரு பழங்குடி பெண்ணின் வாழ்க்கையும், வார்த்தைகளும்" எனும் நூலை எழுதினார். அதில் அவர் குறிப்பிடுவதாவது..,

"மாதவிலக்கு சமயம் வரும் பீரியட்ஸ் வலி என்றால் என்னவென்றே அந்த பெண்களுக்கு தெரியவில்லை. அவர்கள் உணவு மிக சத்தானதாக இருப்பதால் அவர்கள் மிக ஆரோக்கியமாக உள்ளனர். பெண்கள் 15- 16 வயதில் தான் வயதுக்கு வருகிறார்கள். வயதுக்கு வந்ததும் குறைந்த காலத்திலேயே கல்யாணம் ஆகி கர்ப்பமும் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் பிள்ளைக்கு நாலைந்து வயது ஆகும்வரை அவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவதில்லை. இப்படி பிள்ளைக்கு நாலைந்து வயது வரை திட உணவை கொடுக்காமல் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால், அவர்களுக்கு பீரியட்ஸ் சுத்தமாக நின்றுவிடும். இயற்கையான கருத்தடை முறை.

அதன்பின் மீண்டும் கர்ப்பம், மீண்டும் 10 மாதம் மாதவிலக்கு இல்லை, மீண்டும் தாய்ப்பால்...

கணக்குபோட்டால் ஒரு பழங்குடி பெண் ஆயுளில் ஐம்பதே முறைதான் மாதவிலக்கை சந்திக்கிறார். அதனால் அவர்களுக்கு மாதவிலக்கு வலியானது விசயமாக இருப்பதில்லை. இதே வளர்ந்த நாடுகளில் இருக்கும் பெண்கள் ஆயுளில் 400 முறை மாதவிலக்கை சந்திக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயதுவரை ஓரிரு ஆண்டுகளை தவிர ஆயுளில் பெரும்பங்கு ஆண்டுகளில் அவர்களின் உடல் மாதவிலக்கு சமய ஹார்மோன்களை உற்பத்தி செய்து களைத்துவிடுகிறது. வலி தாங்க முடியாததாக மாறிவிடுகிறது. வளர்ந்த நாடுகளில் மார்பக புற்றுநோய் பெருமளவு வர இதுவும் ஒரு காரணம்.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்