கதம்பம்

மேதையின் மனைவி!

Published On 2023-11-22 17:02 IST   |   Update On 2023-11-22 17:02:00 IST
  • நண்பர்கள் வீட்டில் தான் தங்கி இருந்ததாக தெரிகிறது.
  • பாடம் எடுக்கையில் மேலே மாடியில் இருந்து அவரை திட்டுகிறாள்.

சாக்ரடிஸ் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தார். போர்வீரர், கல் தொழிலாளி இப்படிப்பட்ட பணிகளில் இருந்து தத்துவஞானியாக மாறியவர். ஜிம்னாசியம் வைத்து இருந்தார். பிளேட்டோ அவரது மாணவர். ஜிம்மில் தத்துவமும், கணிதமும் என பல விசயங்களை பேசுவார்கள்.

அவருக்கு சொந்த வீடு கூட இல்லை. நண்பர்கள் வீட்டில் தான் தங்கி இருந்ததாக தெரிகிறது. மிக தாமதமாக தன் 40வது வயதில் தான் திருமணம் செய்துகொள்கிறார். மனைவி பெயர் சாந்திபி. அவரை விட 20 வயது இளையவள்.

சாந்திபி மிகுந்த முன்கோபி. திட்ட ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சாக்ரடிஸிடம் இது சொல்லபட்டபோதும் அவர் சாந்திபியை மாற்றிவிட முடியும் என நம்பினார். "என் அறிவுக்கு விடபட்ட சவால் இது" எனவும் சொன்னார். வருமானம் இல்லாத ஒரு தத்துவஞானிக்கு சாந்திபியை விட்டால் வேறு மணப்பெண் கிடைக்காததாலும் சமாதானத்துக்கு அவர் இதை சொல்லி இருக்கலாம்.

இருவருக்கும் மூன்று மகன்கள் பிறக்கிறார்கள். சாந்திபி சாக்ரடிஸை மிக மோசமாக நடத்தியதாக தெரிகிறது. அவர் வீட்டுக்கு கீழே இருந்து பாடம் எடுக்கையில் மேலே மாடியில் இருந்து அவரை திட்டுகிறாள். அதன்பின் தலைக்கு மேல் தன்ணீரை ஊற்றுகிறார். சாக்ரடிஸ் "முன்பு இடி இடித்தது, இப்போது மழை பெய்தது" என்கிறார்.

சாந்திபியின் இந்த கோபத்துக்கு காரணம் சாக்ரடிஸ் மாணவர்களிடம் கட்டணம் வாங்காமல் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்ததுதான்.

ஒருமுறை மளிகை சாமான் வாங்க அனுப்பி, தப்பு, தப்பாக மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார் சாக்ரடிஸ். அதற்கு சாந்திபி அவரை திட்ட, சாக்ரடிஸ் எதுவும் பேசமுடியாமல் நிலைகுலைந்து தூணில் சாய்ந்து நின்றதாக சீடர்களின் குறிப்புகள் கூறுகின்றன.

பிளேட்டோவின் குறிப்பில் சாந்திபியுடனான பிரச்சனையை தீர்க்கதான் சாக்ராயிடிக் முறை எனும் நிர்வாகவியல் முறையை சாக்ரடிஸ் உருவாக்கியதாகவும், அதை தன் மகனுக்கு கற்றுக்கொடுத்து அம்மாவுடன் எப்படி சமாதானமாக போவது என கற்றுக்கொடுத்ததாகவும் கூறுகிறார். இந்த முறை இன்னமும் பரவலாக நிர்வாகவியலில் பின்பற்றப்படுகிறது.

- நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News