கதம்பம்

மூளைச் சுரண்டல்

Published On 2023-12-01 17:15 IST   |   Update On 2023-12-01 17:16:00 IST
  • எல்லாவிதமான அபத்தக் குப்பைகளையும் மூளையில் திணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாக அதை அவர்கள் காண்கிறார்கள்.
  • மூளையை உங்களின் சொந்தக் கைகளில் விட்டுவிடாத படிக்கு மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

மூளை எனப்படுகிற நுட்பமான யந்திரம், உடம்பின் ஒரு பகுதியாக உள்ளது.

"ஆனால் மூளைக்குள் உடன் பிறந்ததாக எவ்வித நிகழ்ச்சிநிரலும் இல்லை."

இயற்கை மிகுந்த கருணை உடையதாயிருக்கிறது.எவ்விதமான நிகழ்ச்சிநிரலையும் உடன் இணைக்காமலேயே உங்கள் மூளையை விட்டுவைத்துள்ளது.

இதன்மூலம் இயற்கை உங்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. உங்கள் மூளையை என்னவாக வெல்லாம் ஆக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினாலும் அப்படியே நீங்கள் ஆக்கிக்கொள்ள முடியும்.

ஆனால் இயற்கை கருணையுடன் விட்டுவைத்ததை, உங்கள் மதகுருமார்களும் உங்கள் அரசியல்வாதிகளும் உங்கள் சான்றோர்கள் எனப்படுபவர்களும் சுரண்டி வந்திருக்கிறார்கள்.

எல்லாவிதமான அபத்தக் குப்பைகளையும் மூளையில் திணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பாக அதை அவர்கள் காண்கிறார்கள்.

மூளை ஒரு எழுதப்படாத பலகை-மூளையில் நீங்கள் எழுதும் எதுவும் உங்கள் மதக்கோட்பாடாக உங்கள் அரசியல் சித்தாந்தமாக ஆகிறது.

ஆனால் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு சமுதாயமும் உங்கள் மூளையை உங்களின் சொந்தக் கைகளில் விட்டுவிடாத படிக்கு மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

மூளையானது முற்றிலும் சரியாகவே இருக்கிறது-அது இயற்கை உங்களுக்கு கொடுத்த சுதந்திரம்;நீங்கள் வளர்வதற்கு அளித்த வெளி. ஆனால் அந்த வெளியில் நீங்கள் வளர முடியும் முன்பாகவே சமுதாயம் அதில் எல்லாவிதமான அபத்தைத்தையும் போட்டு அடைத்து விடுகிறது.

-ஓஷோ

Tags:    

Similar News