கதம்பம்
null

அங்கே வெட்டவெளி தான்..!

Published On 2023-11-25 17:30 IST   |   Update On 2023-11-25 17:30:00 IST
  • ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம். இரண்டுக்கும் நடுவே வெறும் வெளி .
  • நமக்குள் ஏகப்பட்ட ஈகோ, போட்டி, பொறாமை. நான் பெரியவனா, நீ பெரியவனா என..

பிரபஞ்சம் முழுக்க நட்சத்திரங்களும், கிரகங்களும் இருப்பதாக நினைத்தால் தவறு.

பிரபஞ்சம் முழுக்க இருப்பது வெறும் வெளிதான். கற்பனைக்கெட்டாத அளவு வெறும் வெளி பிரபஞ்சமெங்கும் நிரம்பியுள்ளது.

ஒரு விடியோவில் பார்த்தேன். சூரியனை கால்பந்து சைஸில் சுருக்கி கோவை நேரு ஸ்டேடியத்தில் வைத்தால், பிரபஞ்சத்தை அதே அளவு சுருக்கினால், வாயேஜர் - 1 விண்கலம் 1977ல் கிளம்பி இப்போது 2023ம் ஆண்டில் நேரு விளையாட்டு மைதானத்தின் வெளிப்புற கேட்டை தாண்டியுள்ளது.

நமக்கு அருகே உள்ள நட்சத்திரமான ஆல்பா சென்டாரி சேலத்தில் உள்ள இன்னொரு கால்பந்து. அதை வாயேஜர் - 1 சென்றடைகையில் 75,000 ஆன்டுகள் ஆகிவிடும்.

கோவையில் ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம், சேலத்தில் ஒரு கால்பந்து சைஸ் நட்சத்திரம். இரண்டுக்கும் நடுவே வெறும் வெளி .

இந்த கால்பந்தை நம்பி பட்டாணி சைஸில் ஒரு உலகம்...அதனுள் அணுவளவு சைஸில் மனிதர்கள். நமக்குள் ஏகப்பட்ட ஈகோ, போட்டி, பொறாமை. நான் பெரியவனா, நீ பெரியவனா என..

-நியாண்டர் செல்வன்

Tags:    

Similar News