கதம்பம்

கழிவு நீக்கும் கசாயம்

Published On 2023-02-04 11:16 GMT   |   Update On 2023-02-04 11:16 GMT
  • மூன்று வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குடிக்கும் அளவில் இருந்து ஐந்து பங்கு நீர் சேர்த்து கொடுங்க.
  • மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஓமம் தண்ணீர் மட்டும் கொடுத்து வாருங்கள்.

உடலில் தேங்கும் கழிவுகளே நோய்களின் ஆரம்பம் ஆகும். உடற்கழிவுகள் மலம், மூத்திரம், வியர்வை, கோழை, சளி, மூலமாக தான் வெளியேறும். வாந்தி, பேதி, மூலமும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுகிறது. அதனை நிறுத்துவதன் மூலம் உடலில் அடுத்த கட்ட நோய்கள் பிறக்கின்றன. உடற்கழிவுகளை வெளியேற்ற எளிமையான குடிநீரை காண்போம்...

கர்ப்பிணி பெண்கள் முயற்சி செய்ய வேண்டாம்.

தேவையான பொருட்கள்...

திப்பிலி 6

மிளகு 12

சீரகம் மூன்று சிட்டிகை

ஓமம் இரண்டு சிட்டிகை

சோம்பு 1 உப்பு ஸ்பூன் அளவு

இரண்டு சிறிய துண்டு இஞ்சி (தோல் சீவியது)

ஒரு கை புதினா

இவை அனைத்தையும் அரைத்து இதனுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி ஒரு நாள் முழுவதும் தேவைபடும் நீரில் கலந்து வைத்துக் கொண்டு பத்து வயது முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் குடிக்கவும்.

மூன்று வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குடிக்கும் அளவில் இருந்து ஐந்து பங்கு நீர் சேர்த்து கொடுங்க.

மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஓமம் தண்ணீர் மட்டும் கொடுத்து வாருங்கள். வாரத்திற்கு இரண்டு / மூன்று முறை பயன்படுத்தினால் போதுமானது.

பலன்கள் :- உடலில் உள்ள கழிவுகள் நீங்குவதுடன் சோம்பல், அலுப்பு, மலச்சிக்கல், பசியின்மை, அஜீரணம், சுவாசக் கோளாறுகள், இரத்த ஓட்ட சீர்கேடுகள், தலைவலி குணமாகும். இதில் கூறப்பட்டுள்ள எல்லா பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்...

-முனைவர் பா. ஜெயப்ரசாத்

Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்