கதம்பம்

மூலிகை தலையணை

Published On 2023-03-18 11:18 GMT   |   Update On 2023-03-18 11:18 GMT
  • காய்ஞ்ச இலையை தூர எறியாம சாய்ங்கால நேரத்துல புகைமூட்டம் போட்டால் கொசுவை விரட்டலாம்.
  • கழுத்துவலி வர்றவங்க தலையணைக்கு பதிலா வெறும் துணியில நொச்சி இலையை வச்சி தூங்கலாம்.

மூலிகை தலையணை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதோ சொல்றேன்...

ஜலதோஷத்தால வர்ற தலைவலியில இருந்து பீனிசம்னு சொல்லக்கூடிய சைனஸ், மூக்கடைப்பு, கழுத்து பிடரியில வரக்கூடிய வலினு எல்லாத்துக்கும் நொச்சி தலையணை கைமேல் பலன் தரும்.

நொச்சி இலையை பறிச்சிட்டு வந்து தலையணையோட உறையில அதாவது நம்ம தலை படுற மாதிரி வச்சி தூங்கணும். இந்த இலை காய்ஞ்சு போனாலும் பரவாயில்லை. 10 நாள் வரைக்கும் வச்சிட்டு பிறகு அதை எடுத்துட்டு வேற இலையை வச்சி தூங்கலாம்.

காய்ஞ்ச இலையை தூர எறியாம சாய்ங்கால நேரத்துல புகைமூட்டம் போட்டால் கொசுவை விரட்டலாம்.

கழுத்துவலி வர்றவங்க தலையணைக்கு பதிலா வெறும் துணியில நொச்சி இலையை வச்சி தூங்கலாம்.

தூக்கம் வராம அவதிப்படுறவங்க மருதாணி இலையை மேலே சொன்ன மாதிரி வச்சி தூங்கினா தூக்கம் தூக்கமா வரும்.

மனநிலை பாதிப்பு உள்ளவங்களுக்கும், தூக்கமில்லாம தவிப்பவங்களும் மருதாணிப்பூவை தலையணைக்குள்ள வச்சி தூங்கினா நிச்சயமா பலன் கிடைக்கும்.

-மரிய பெல்சின்

Tags:    

Similar News

நாத்தனார்
அருமருந்து