கதம்பம்

சர்க்கரை நோயை குணமாக்க...

Update: 2023-03-15 11:09 GMT
  • பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சர்க்கரை நோய் வராது.
  • ஒருவேளை உணவிற்கும் மறுவேலை உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

இன்றைக்கு சர்க்கரை நோய் தான் பல பேரை பாடாய்படுத்தி வருகிறது. இதனை விரட்டியடிக்கும் எளிய கைமருந்து இதோ...

வெந்தயம்- 50 கிராம்

சீரகம்- 75 கிராம்

மிளகு- 200 கிராம்

மூன்றையும் ஒன்றாக சேர்த்து வாணலியில் மிதமான அனலில் சன்னமாக வறுத்து பொடி ஆக்கி ஒவ்வொரு வேலை உணவின்போதும் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிடுங்கள், சர்க்கரை நோய் உங்களை விட்டு போயே போய்விடும். இதனுடன் நாட்டு சர்க்கரையோ அல்லது கருப்பட்டியோ தேவையான அளவுக்கு சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

பட்டை தீட்டப்படாத பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு சர்க்கரை நோய் வராது. வந்த நோயும் ஓடிப் போய்விடும்.

ஒருவேளை உணவிற்கும் மறுவேலை உணவிற்கும் குறைந்தபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும். அதுவும் பசித்து சாப்பிட வேண்டும். ரசித்து ருசித்து மென்று கூழாக்கி உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இடையிடையே நொறுக்கு தீனி தின்பதும் தேநீர் அருந்துவதும் சர்க்கரை வருவதற்கு காரணமாக அமைகின்றது.

எல்லா விடயங்களுக்கும் கவலைப்படுவது என்பது மிகப்பெரிய ஆபத்தை ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்துகின்றது. இதுவே எதிர்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கும் காரணமாக அமைகின்றது.

-மணிகண்டன்

Tags:    

Similar News