- ஆற்காடு நவாப் வெள்ளையர்களின் கைப்பாவையாக மாறியதுபோல் சியாங்கேஷேக் ஜப்பானின் கைப்பாவையாக ஆட்சி செய்தார்.
- சீனா தயாரிப்புகள் இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைதான் உள்ளது.
உலக அரங்கில் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமானால் சீனாவுடன்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அளவுகடந்த மக்கட்தொகை.. பல்வேறு மொழிகள்.. இந்தியாவைவிட மிக மோசமான மூட நம்பிக்கைகளும் முட்டாள் தனமான பழக்க வழக்கங்களும் கடுமையான சாஸ்திர சம்பிரதாயங்களும் கொண்ட நாடாக இருந்தது சீனா!
மன்னராட்சியை வீழ்த்தி சன்யாட்சென் ஆரம்பித்த கோமிண்டாங் கட்சி, அதனுடைய தலைவர் சியாங்கேஷேக் காலத்தில் ஒரு ராணுவ சர்வாதிகார நாடாக மாறி ஜப்பானியர்களால் கடுமையாக சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்தது.
ஆற்காடு நவாப் வெள்ளையர்களின் கைப்பாவையாக மாறியதுபோல் சியாங்கேஷேக் ஜப்பானின் கைப்பாவையாக ஆட்சி செய்தார்.
1912 லிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை ஏழுபேரோடு தொடங்கி கடுமையாக உழைத்து சீனாவின் கல்வியறிவற்ற மக்களை ஒருங்கிணைத்து சீனாவில் 1948 இல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவியவர் மாவோ.
கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் போராட்டம் அது. பின்னர் 1955 இல் எடுத்த ஒரு அதிரடியான விவசாய புரட்சி தோல்வியடைந்ததால் பசியும் பட்டினியும் தாண்டவமாடின.
ஆனால் அவர் இட்ட அடித்தளத்தில் பின்னர் உலகமயமாக்களுக்குப்பிறகு சீனாவின் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது.
இன்று சீனப்பொருட்கள் இல்லாவிட்டால் அமெரிக்காவின் ஒரு நாள் கூட கழியாது. அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு மருந்து வகைகளுக்கு தேவையான வேதியியல் பொருட்கள் சீனாவிலிருந்து செல்கின்றன.
சீனாவில் சாஃப்ட் கோக் எனப்படும் கரி கிடையாது. இரும்பு தாதுகிடையாது. ஆனால் உலகத்திலேயே இரும்பு பொருட்கள் சீனாவில்தான் விலை குறைவு.
ஒரு வகையில் உலகில் ஒரு தொழிற்புரட்சியையே உண்டாக்கியது சீனாதான். இந்தியாவுக்கே கூட பெரும் வளர்ச்சியையே அளித்தது சீனா இயந்திரங்கள்தான்.
உதாரணமாக ஒரு நிட்டிங் மெஷின் ஜப்பான் தயாரிப்பு 25 லட்சத்திற்கு என்றிருந்த போது சீனா அதை ஐந்து லட்சத்திற்கு அளித்தது. ஒயர் கட்டிங் மெஷின் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய். இப்போது 5 லட்சத்திற்கு சீன மெஷின்கள் கிடைக்கின்றன. இது ஒரு உதாரணம்தான். எல்லா இயந்திரங்களுக்கும் இதுதான் நிலை.
கொரோனா நோய் பரவிய போது பத்தே நாட்களில் நான்கு அடுக்கு மருத்துவமனையை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
ஒரு சின்ன உதாரணம் அவர்களுடைய மருத்துவ கல்வி. சென்னையிலுள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜைவிட பரப்பளவில் பெரியது பெய்ஜிங் மருத்துவ கல்லூரி லைப்ரரி.
இப்போதைய நிலையில் சீனா தயாரிப்புகள் இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைதான் உள்ளது.
அறுபது ஆண்டுகளுக்கு முன் உண்ண உணவு இல்லாமல் பட்டினியால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து கிடந்த சீனா இன்று அமெரிக்காவுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் மாவோதான் என்பதை மறக்கவும் முடியாது .. யாராலும் மறுக்கவும் முடியாது.
-எம.எஸ். ராஜகோபால்