- வேலையில் இருக்கும் காலகட்டத்தில் நியாயமாக நேர்மையாக இருங்கள்.
- செய்ற தொழிலுக்கும், நம்மளோட வாடிக்கையாளருக்கும் அதிகபட்ச நேர்மையோட என்னைக்குமே இருக்கணும்.
படிக்கிற வயது காலம் வரை கண்டிப்பா படிச்சிருங்க. எந்த படிப்பும் கெட்ட படிப்பில்லை. எதுமே படிக்காம இருக்கிறதுதான் தப்பு.
படிச்சு முடிச்சிட்டு படிப்புக்கு தகுந்த மாதிரியோ இல்லை அந்த நேரத்துல உங்களின் நேரத்தை வீணடிக்காம இருக்குறதுக்காக ஒரு வேலையில சேருங்க.; வேலைக்கு முயற்சிக்காம போகாம இருக்கிறது தான் தப்பே தவிர ஏதாவது ஒரு வேலையில இருக்குறது தப்பேயில்லை., எல்லா வேலையும் ஏதோ ஒரு அனுபவத்தையும், சில பல நல்ல நண்பர்களையும் உருவாக்கித்தரும்.,
கிடைத்த வேலையில் உங்க திறமையை காண்பிக்க முயலுங்கள். நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளம் சலுகைகளுக்காக வேலையை செய்யாமல், இந்த வேலையும், இதில் கிடைக்கும் அனுபவமும் நிச்சயம் ஒரு நாள் நம்ம வாழ்க்கையில ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையில்ல அந்த வேலையை செய்யுங்க.
வேலையில் இருக்கும் காலகட்டத்தில் நியாயமாக நேர்மையாக இருங்கள்,
இப்படி இருந்தால் நிறைய நண்பர்கள் கான்டெக்ட் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கைக்கான முதலீடா பிற்காலத்தில் எப்பவும் இருக்கும்.
பருவத்தே பயிர் செய் என்பது மாதிரி நிச்சயம் கல்யாணம், குழந்தை போன்றவற்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். குடும்பத்தோட எப்பவும் அன்பா இருங்க. இது எப்பவுமே உங்களுக்கு ஒரு பாசிட்டிவிட்டியை உருவாக்கி தரும்.
வேலை செய்து சம்பாரிக்கும் காலங்களில் அனாவசியமான செலவுகளை செய்யாமல் அவசியமான சேமிப்புகளை அவ்வப்போது சேர்த்து வைக்க தவறாதீர்கள்.
உங்கள் உடல்நலத்தில் அதீத அக்கறை கொள்ளுங்கள். இதுதான் வாழ்க்கைக்கான சிறந்த முதலீடு. இதையெல்லாம் 35 முதல் 40 வயதுக்குள் முடித்து விடுங்க.
படிப்பில், வேலையில், உங்க அனுபவத்துல, உங்களுக்கு இருக்குற ஆரவத்துல இருக்கிறதை எல்லாம் முதலீடா போட்டு கையில் இருக்குற சிறிய தொகையை வச்சு பெரிதாக எதையும் கடனா வாங்காம ஒரு தொழிலை தொடங்குங்க.
திரும்பவும் ஒரு சுற்றுக்கு ஓட தயாராகுங்க. இந்த முறை நீங்க முதலாளியா ஓட போரீங்க. ஆனா எப்பவும் முதலாளி என்ற நினைப்புலையே இருந்திட கூடாது. தொழிலாளிகளை அரவணைச்சு போகனும். நெறைய பொறுப்போட இருக்கனும். திடீர்னு ஒருநாள் தொழிலாளி வரலைன்னா அந்த வேலையை நீங்க இறங்கி செஞ்சு தொழிலை காப்பாதிக்க தயாரா இருக்கணும். இந்த நிலைக்கு நீங்க தயாரா இருந்துட்டா உங்க தொழில் ஒரு நாளும் உங்களை விட்டுட்டு போகாது. செய்ற தொழிலுக்கும், நம்மளோட வாடிக்கையாளருக்கும் அதிகபட்ச நேர்மையோட என்னைக்குமே இருக்கணும். விமர்சனங்களை தாங்கிக்கணும். இப்போ இதுக்கெல்லாம் நெறைய இடங்கள்ல நீங்க வேலை பார்த்த அனுபவம் கைகொடுக்கும்.
தொழிலோட வளர்ச்சியை பொறுத்து இன்வெஸ்ட்மென்ட் அதிகபடுத்துங்க. உங்க தொழிலோட வருங்காலத்தை பற்றி தெரிஞ்சுகிட்டே இருங்க. தொழில்ல வர்ற புது விஷயங்களை அப்டேட் பண்ணிக்கிட்ட இருங்க. அப்போதான் தொழில்ல நீடிச்சு இருக்க முடியும்.
இறை நம்பிம்கை இருந்தால் அனுதினமும் இறைவனை தொழுது உங்க வேலையை தொடங்குங்க. நல்ல பாசிடிவ் வைப் தரும்., எல்லாம் கூடி வந்து ஒரு பத்து வருஷம் தாக்கு பிடிச்சிட்டா அதோட வளர்ச்சி உங்க தலைமுறையை தாண்டி நிக்கும்.
இதுகுள்ள பிள்ளைங்க வளர்ந்துட்டா அவங்களையும் இதுல ஈடுபடுத்தி தொழிலை சொல்லி கொடுங்க. பொண்ணு, பையன் பேதம் பார்க்காம சொல்லிகொடுங்க.
எப்பவும் நம்பிக்கையோட இருங்க. எல்லாம் ஒருநாள் நல்லதாவே கைகூடும்.
ஓடினால் ஆறு. தேங்கினால் குட்டை.
நீங்க எப்பவும் ஆறுபோல ஓடி சமுத்திரத்தில் கலந்து பரந்த உலகை உருவாக்கி அதில் எல்லாருக்கும் வாய்ப்பை கொடுங்கள்.
-பரமகுரு போஸ்.