செய்திகள்
நளினி சிதம்பரம்

நீட் சட்டத்தை எதிர்த்து வழக்கு - வைரலாகும் புகைப்படம்

Published On 2021-09-16 05:14 GMT   |   Update On 2021-09-16 05:14 GMT
தி.மு.க.வின் நீட் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் கூறியதாக வைரலாகும் தகவல்.


நீட் விவகாரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக நளினி சிதம்பரம் கூறியதாக தந்தி டிவி செய்தி அடங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது. வைரல் பதிவில் தி.மு.க.-வை எதிர்க்கும் கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த தகவல் உண்மையென நம்பி ட்விட்டரில் பலர் இதனை ரீட்வீட் செய்து இருக்கின்றனர். செய்தி அடங்கிய படம் மட்டுமின்றி வீடியோவும் வைரலாகி வருகிறது. 



இதுகுறித்த இணைய தேடல்களில், தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து நளினி சிதம்பரம் எந்த கருத்தும் தெரிவித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகவில்லை. வைரல் செய்தி அடங்கிய புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2017-இல் வெளியான செய்தி என தெரியவந்தது. 

2017-இல் தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என நளினி சிதம்பரம் பேசினார். அந்த வகையில் வைரலாகும் தகவல் சமீபத்தில் நளினி சிதம்பரம் தெரிவித்தது இல்லை என உறுதியாகிவிட்டது. 

Tags:    

Similar News