செய்திகள்

9 தொகுதிகளிலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தமிழில் விநியோகம்

Published On 2019-04-04 16:03 IST   |   Update On 2019-04-04 16:03:00 IST
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் தமிழில் தயார் செய்யப்பட்டுள்ள அறிக்கையை விநியோகம் செய்யவும் கிராமம் கிராமமாக மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. #LoksabhaElections2019
சென்னை:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் ராகுல் காந்தி டெல்லியில் வெளியிட்டார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் பணம், நீட் தேர்வு ரத்து, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஆகிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் தமிழக மக்களிடம் வரவேற்பு பெறும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

எனவே இதை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் வாக்குறுதிகள் தமிழில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதை சென்னை சத்திய மூர்த்தி பவனில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் சுஷ்மிதா முகர்ஜி வெளியிடுகிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளிலும் இந்த அறிக்கையை விநியோகம் செய்யவும் கிராமம் கிராமமாக மக்களிடம் விளக்கி பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். #LoksabhaElections2019 #Congress

Similar News