செய்திகள்

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - உதயசூரியன் சின்னத்தில் போட்டி

Published On 2019-03-04 16:47 IST   |   Update On 2019-03-04 16:47:00 IST
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது, அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #2019polls #DMKalliance #IJKDMKalliance
சென்னை:

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக இன்று ஒதுக்கீடு செய்துள்ளது, அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும், இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ரவி பச்சைமுத்துவும் கையொப்பமிட்டனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியை இந்திய ஜனநாயக கட்சி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #2019polls #DMKalliance #IJKDMKalliance

Similar News