உள்ளூர் செய்திகள்
சுரண்டை அருகே மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது
- அய்யனார் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் அய்யனார் தப்பியோட முயன்றுள்ளார்.
நெல்லை:
சுரண்டையை அடுத்த வேலப்ப நாடாரூர் கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார்(வயது 32). இவர் நேற்று சேர்ந்தமரத்தில் உள்ள பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக சேர்ந்தமரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அய்யனார், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 18 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.