உள்ளூர் செய்திகள்

மாணவிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

காசி தமிழ் சங்கமத்தில் நடனமாடிய சீர்காழி மாணவிக்கு வரவேற்பு

Published On 2022-12-21 09:57 GMT   |   Update On 2022-12-21 09:57 GMT
  • மாணவி சுபானு சிவதாண்டவ நடனமாடி பெருமை சேர்த்தார்.
  • உற்சாக வரவேற்பளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

சீர்காழி:

மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது.தமிழ் சங்கமத்தில் தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம், உணவு, கைத்தறி விவசாயம், நாட்டுப்புற கலை ஆகியவற்றை காட்டும் 75 அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது,

காசி மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு பங்கேற்று காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடன ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி–சீர்காழிக்கு பெருமை சேர்த்தார்.

மாணவி சுபானு யோகாவில் உலக அளவில் பல்வேறு சாதனைகள் புரிந்து 270க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

காசி தமிழ் சங்கமம் முடிந்து சொந்த ஊரான சீர்காழி வந்தடைந்த சுபானுவை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளித்து மாணவியை வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News