உள்ளூர் செய்திகள்

செக்கடி பகுதி அகழிக்கு வந்த தண்ணீரை மேயர் சண். ராமநாதன் மலர் தூவி வரவேற்றார்.

தஞ்சை புது ஆற்றில் இருந்து அகழிக்கு தண்ணீர் திறப்பு

Published On 2023-07-18 10:07 GMT   |   Update On 2023-07-18 10:07 GMT
  • செக்கடி அகழியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து முடிந்தன.
  • புது ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும் அகழிகள் கடந்த 2018-ம் ஆண்டு தூர்வாரப்பட்டது.

இதில் 18 மற்றும் 19-வது வார்டுக்கு உட்பட்ட செக்கடி பகுதியில் உள்ள அகழியும் தூர்வாரப்பட்டது.

இந்த நிலையில் புது ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் மழை நீர் தேக்கி வைப்பதற்காக செக்கடி அகழியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தன.

இதையடுத்து புது ஆற்றில் இருந்து தண்ணீர் அகழிக்கும் வந்தடைந்தது. அந்தத் தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழி தண்ணீரில் மலர் தூவி வரவேற்றார்.

இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேத்தா, தமிழ்வாணன், சசிகலா அமர்நாத், உதவி பொறியாளர் கார்த்திக்கேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News