உள்ளூர் செய்திகள்

சேரம்பாடியில் யானைகள் முகாம்-சுற்றுலாபயணிகளுக்கு எச்சரிக்கை

Update: 2022-06-26 10:10 GMT
  • யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர்.
  • கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனச்சரகத்தில் சேரங்கோடு, காபிக்காடு, காவயல், கோல்ஸ்லேண்ட், கோஞ்சால் பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளது.

உதவி வனப்பாதுகாவலர் ஷர்மிளி மேற்பார்வையில் வனக்குழுவினர் இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூர்- கோழிக்கோடு சாலையில், அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனால் யானைகளை ரசிக்க நிற்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News