உள்ளூர் செய்திகள்

கும்பக்கரை அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

கும்பக்கரை அருவியில் குளியல் விபரீதம் உணராமல் விளையாடும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

Published On 2022-12-28 12:28 IST   |   Update On 2022-12-28 12:28:00 IST
  • அய்யப்ப சீசன் என்பதால் பக்தர்களின் வருகையும் சுருளி அருவிக்கு அதிகரித்துள்ளது.
  • திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

ஆபத்தான குளியல்

தற்போது அய்யப்ப சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வட்டக்கானல் மற்றும் கொடைக்கானல் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

இதனால் கும்பக்கரை அருவியில் நேற்று மதியம் 1 மணி முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் அருவியின் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த வனக்காவலர்கள் அருவிக்கு வரும் நீர் வரத்து அதிகரிப்பதை கண்டு அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியே ற்றினர்.

இதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு வனத்துறையினர் தடை விதித்து அருவியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளைப்பெருக்கை பார்ப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் சுற்றுலா பயணிகளின் மிகுந்த ஆர்வத்தினால் அருவிக்கு மேல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குளித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஆபத்தானது என்பதால் விபரீதம் உணராமல் விளையாடும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News