ஓசூர் நகர்புற நல மையம் அருகே தொடங்கிய நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
- கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்
- தொடர்ந்து 8 கி.மீ.தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னையில் இன்று காலை சுகாதாரத் துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலையில் முன்னிலையில், இந்த திட்டத்தை, ஓசூர் அண்ணாமலை நகரில் உள்ள நகர்புற நல மையம் அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதாரத்துறை அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர தொடர்ந்து 8 கி.மீ.தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது.