உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நடைபயண போராட்டம்

Published On 2023-11-14 06:40 GMT   |   Update On 2023-11-14 06:40 GMT
  • 100 நாள் வேலை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நடைபயண போராட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
  • சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு 14 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த வகையில் ரூ.87 கோடி அளவிற்கு சம்பள பாக்கி உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் பிரதமர், நிதிய மைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல் உள்ளதால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகருக்கு வரும்போது மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் எனவும் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி மாவட்ட காங்கிரஸ் சார்பில் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபயண போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் செங்க மல நாச்சியார்புரத்தில் தொடங்குகிறது. சுமார் 100 கிராமங்களுக்கு நடந்து சென்று 100 நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மத்திய அரசு சம்பளத்தை உடனே வழங்க வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News