உள்ளூர் செய்திகள்

மாநில தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு வரவேற்பு

Published On 2022-12-04 07:13 GMT   |   Update On 2022-12-04 07:13 GMT
  • மாநில தடகள போட்டியில் வென்ற மாணவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
  • காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் வசந்தகுமார் திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்.

இதில் இவர் ''போல் வால்ட்'' எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் 2-வது பரிசு பெற்றார். இவரை பாராட்டும் வகையில் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ-மாணவிகள், கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

கிராம எல்லையில் இருந்து மாணவர் வசந்தகுமார் உடற்உகல்வி ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோரை மாலை அணிவித்து பள்ளிச் செயலாளர் பாலாஜி நாடார், தலைவர் லட்சுமண நாடார், உப தலைவர் ஜெய் கணேஷ், பெற்றோர் ஆசிரியர்-சங்கத் தலைவர் தர்மராஜ் நாடார், உறவின்முறை தலைவர் ராமசாமி நாடார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் நாடார், செயலாளர் கள்ள கொண்ட ராஜன் நாடார், கணக்கர் முத்தையா நாடார் ஆகியோர் வரவேற்று ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்து வந்தனர்.

பள்ளியில் நடந்த பாராட்டு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை பேச்சியம்மாள் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ் உள்பட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் மாணவர் வசந்தகுமாரை பாராட்டினர்.

Tags:    

Similar News