3 அரசு பஸ்களுக்கு பூஜை நடத்திய கிராம மக்கள்
- தேன்கனிக்கோட்டை அருகே அரசு பஸ்களுக்கு கிராம மக்கள் பூஜை நடத்தினர்.
- அரசு பஸ்களின் சேவையை பாராட்டி ஆண்டு தோறும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாலிவாரம் கிராமத்திற்கு தமிழக அரசு 41 ஆகிய எண் கொண்ட டவுன் பஸ் மற்றும் சாலிவாரம் முதல் பெங்களூர் செல்லும் 2 கர்நாடக அரசு பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த பஸ்களின் பொதுமக்களின் சேவையை கருதி ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பாக 3 பஸ்களுக்கும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று பூஜை நடத்தினர்.
முன்னதாக 3 பஸ்களையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, வாழை மரங்கள், மாவிலை தோரணங்கள் கட்டி மலர்களால் சிறப்பாக அலங்கரிப்பட்டது. சோமேஷ்வரர் கோயில் முன்பாக பஸ்களை நிறுத்தி மேளதாளங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகள் செய்யபட்டது.
இதில் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்;-தங்கள் கிராமத்திற்கு வரும் 3 அரசு பஸ்களின் சேவையை பாராட்டி ஆண்டு தோறும் கிராம மக்கள் சார்பாக ஆயுதபூஜை விழா நடந்தி வருகின்றோம் என தெரித்தனர். இவ்விழாவில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.