சீர்காழியில் முன்னேற்றக்குழு கூட்டம் நடந்தது.
கிராம வேளாண் முன்னேற்றக்குழு கூட்டம்
- வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டம் நடந்தது.
- உழவன் செயலி, மண்வளம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருநகரி கிராமத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைத்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளா ண்மை இணை இயக்குனர் ஜெ. சேகர் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராஜராஜன்,ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகளுக்கு வேளா ண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உழவன் செயலி, மண்வளம் ஆகியவை குறித்து பயிற்சி அளித்து விளக்க ப்பட்டது.
துணை வேளா ண்மை அலுவலர் ரவிச்சந்தி ரன், உதவி வேளாண் அலுவலர்கள் வேதயராஜன், விஜய் அமிர்தராஜ், அலெக்சாண்டர், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவாஜி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செளந்தரராஜன் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
இதேபோல் செம்பனிருப்பு கிராமத்திலும் வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன் தலைமையில் நடைபெற்றது.