உள்ளூர் செய்திகள்

அடுத்த மாதம் பணி தொடங்கும்: திருவள்ளூரில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தகவல்

Published On 2023-03-05 15:26 IST   |   Update On 2023-03-05 15:26:00 IST
  • மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
  • அடுத்த மாதம் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்கும்.

திருவள்ளூர்:

திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் வேடங்கிநல்லூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த இடத்தை திருவள்ளூர் தொகுதி எம். எல். ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:

மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.

அதன்படி புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.33 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரே நேரத் தில் 56 பஸ்கள் நிறுத்தம் செய்யவும், நகரப் பேருந்துகள் வந்து செல்லவும் முடியும். மேலும் 103 வணிக வளாகம், முதல் தளத்தில் 93 கடைகளும் இடம் பெற உள்ளன.

மேலும், குடிநீர் வசதி, கழிப்பறைகள், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைய இருக்கிறது. இதற்கான ஒப்பந்தப் பணி ஒரு வாரத்தில் நடைபெறும்.

அடுத்த மாதம் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்கும். இதையடுத்து புறவழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொ டங்க நடவடிக்கை எடுக்கப் படும்.

இன்னும் 10 ஆண்டுகளில் பூந்தமல்லி வரை வந்துள்ள மெட்ரோ ரெயில் திட்டம் திருவள்ளூர் வரை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் மதியழகன், நகர்மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News