உள்ளூர் செய்திகள்

வி.ஐ.டி.யில் ரிவேரா கலை விழா விளையாட்டு போட்டிகளை கிரிக்கெட் வீரர் ரஹானே தொடங்கி வைத்து, மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கினார். அருகில் வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன் மற்றும் பலர் உள்ளனர். 

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலைவிழா தொடங்கியது

Published On 2023-02-23 15:31 IST   |   Update On 2023-02-23 15:31:00 IST
  • கிரிக்கெட் வீரர் ரஹானே மாணவிகளின் கேள்விகளுக்கு ருசிகர பதில்
  • மாரத்தான் ஓட்டம் நடந்தது

வேலூர்:

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இன்று முதல் 4நாட்கள் நடக்கிறது.இதன் தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது.

பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானே தேசிய கொடி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு விளையாடுகிறேன் அது பெருமையாக உள்ளது.

விளையாட்டு கலை போல கல்வி மிக முக்கியமான ஒன்று.விஐடி பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

இந்த விழாவில் 45 ஆயிரம் பேர் கலந்து கொண்டதை பார்க்கும் போது கிரிக்கெட் மைதானத்தில் இருப்பதை போல உணர்வு ஏற்படுகிறது.

கல்லூரி நாட்களை நான் தவற விட்டேன். அந்த நேரத்தில் நாட்டுக்காக விளையாடி க்கொண்டிருந்தேன். இந்தியாவில் அதிக இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்கள் தைரியமானவர்கள் அவர்களுக்கு புதிய கருத்துக்களை சொல்ல வேண்டியதில்லை. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு கிரிக்கெட் வீரர் ரஹானே பதிலளித்தார்.

அவர் கூறியதாவது:-

ராகுல் டிராவிட் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை பார்த்து கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். தோனியை பார்த்து வளர்ந்தேன்.

ஆஸ்திரேலியா நாட்டின் காபா மைதானத்தில் விளையாடியதை என்னால் மறக்க முடியாது. அந்த போட்டியில் கடினமாக விளையாடி வெற்றி பெற்றோம்.. கிரிக்கெட் என்னுடைய சுவாச மூச்சு புத்தகம் படிப்பது ஓவியம் வரைவது என்னுடைய பொழுது போக்காகும். தற்காப்புக் கலையில் கருப்பு பெல்ட் பெற்றுள்ளேன்.

ஒரு நாள் மட்டுமே வகுப்பு சென்றேன் கல்லூரி வாழ்க்கை என்னால் மறக்க முடியாது.கிரிக்கெட் விளையாட தொடங்கியதால் கல்லூரி வாழ்க்கையை தவறவிட்டேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது பெற்றோர்கள் உதவியாக இருந்தார்கள். அவர்களுடைய உதவியால் என்னுடைய இலக்கை அடைந்தேன் எனக் கூறினார். விழாவில் ரகானே மரக்கன்று நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன் ஜி வி செல்வம் உதவி துணை தலைவர் காதம்பரி விஸ்வநாதன் துணைவேந்தர் ராம் பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மலிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரிவேரா கலை விழாவில் முதல் நாளான இன்று காலை மன நலன் மற்றும் மன உறுதி என்ற நோக்கத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற 9 கிலோ மீட்டர் தூர மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை துணை தலைவர் ஜி.வி.செல்வம் துவங்கி வைத்தார்.

இதில் மாணவர்கள் மாணவிகளுக்கு தனித்தனியாக மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது

காட்பாடி சாலையின் வழியாக சென்று அக்சிலியம் கல்லூரி வழியாக சென்று சித்தூர் சாலை வழியாக சென்று திருவலம் சாலைவழியாக வந்து மீண்டும் பல்கலைக்கழகத்தை அடைந்தது

இந்த ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரஹானே பரிசு சான்றிதழ்கள் வழங்கினார்.

Tags:    

Similar News