உள்ளூர் செய்திகள்

ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தாசில்தார் வேண்டா ஆய்வு செய்த காட்சி.

பட்டாசு கடைகளில் ஆய்வு

Published On 2023-10-12 13:11 IST   |   Update On 2023-10-12 13:11:00 IST
  • பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும்
  • உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

அணைக்கட்டு:

தீபாவளி பண்டிக அடுத்த மாதம் ெகாண்டா டப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் அதிகா ரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் தாசில்தார் வேண்டா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது, கடைகளில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்றும், எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் அபிலேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News